மலையாள இயக்குனரின் பேண்டசி படத்தில் யோகி பாபு

மலையாள திரையுலகில் முன்னணி  இயக்குநர் ரெஜிஷ் மிதிலா. மலையாளத்தில் ‘வாரிக்குழியிலே கொலபதகம்’, ‘இன்னு முதல்’ படங்களின் மூலம் பிரபலமானவர் . இப்போது அவர் தமிழுக்கு வருகிறார்.

தமிழில் யோகிபாபுவை நாயகனாக நடிக்க புதிய படத்தை உருவாக்குகிறார்.

இந்த படம் முழுக்க, முழுக்க ஃபேண்டஸி படமாக உருவாகவுள்ளது. யோகிபாபு மற்றும் ரமேஷ் திலக் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா , நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Related Stories: