விஜய் சேதுபதி ஜோடியாகும் அனுஷ்கா

அனுஷ்காவை மீண்டும் தமிழில் நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் டைரக்டர் ஏ.எல்.விஜய். தலைவி படத்துக்கு பிறகு அவர் இயக்க உள்ள படத்துக்காக அனுஷ்காவிடம் கதை கூறியுள்ளார். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாம்.

ஆனாலும் படத்தில் ஹீரோவுக்கு வலுவான கேரக்டர் இருப்பதால் இதில் நடிக்க விஜய் சேதுபதியிடம் விஜய் பேசி வருகிறாராம். இதுவரை அனுஷ்காவுடன் சேர்ந்து நடிக்காத விஜய் சேதுபதி, இதில் அவருக்கு இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories:

More