அண்ணனுடன் நடித்த சரோஜாதேவி, தம்பியுடன் நடிக்கிறார்

அண்ணன் சூர்யா தயாரிப்பில் தம்பி கார்த்தி நடித்து வரும் படம் விருமன், கார்த்தி நடிப்பில் கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்குகிறார். கொம்பன் படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி  மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தற்போது கார்த்தியுடன் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி இணைந்து நடித்து வருகிறார். சரோஜாதேவி ஏற்கெனவே சூர்யா நடித்த ஆதவன் படத்தில் நடித்திருக்கிறார்.

Related Stories:

More