தயாரிப்பாளர்கள் சமரசம்: ஜெயில் 9ம் தேதி வெளியாவது உறுதி

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணிதி, ராதிகா சரத்குமார்  நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயில். இதனை க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் சார்பில் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையி்ல் வேறொரு நிறுவனம் வருகிற 9ம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. இந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையில் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்ட நிலையில் படம் அறிவிக்கப்பட்டபடி 9ம் தேதி வெளியாவது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து இயக்குனர் வசந்தபாலன் தனனது சமூக வலைத்தளத்தில் ஜெயில் என்று பெயர் வைத்ததால் எத்தனை தடைகள், எத்தனை வலிகள் படாதபாடெல்லாம் பட்டுவிட்டேன். இப்போது எல்லா தடைகளும் நீங்கி வருகிற 9ம் தேதி படம் வெளியாகிறது. என்று குறிப்பிட்டுள்ளா

Related Stories:

More