×

நான் சண்டை போட அர்ஜுன் தான் காரணம்: ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்கிறார்

சென்னை: ஜி.எஸ்.ஆர்ட்ஸ் சார்பில் ஜி.அருள்குமார் தயாரித்து அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கி ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’. இப்படத்தில் அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு என்பிகேஎஸ், ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல ராமமூர்த்தி, பத்மன் உள்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். வரும் 21ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்து பரத் ஆசிவகன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்பட நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, ‘‘இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இதன் கதையை இயக்குனர் என்னிடம் சொன்ன போது என் உடல் நடுங்கிவிட்டது. அர்ஜூன் ரியல் லைஃபில் உண்மையாகவே ஜெண்டில்மேன்.

நான் படத்தில் நன்றாக ஃபைட் செய்ய அவர் தான் காரணம். அவர் தான் இந்த படத்தில் ஹீரோ” என்றார். நடிகர் அர்ஜுன் பேசும்போது, ‘‘ ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையின் பெயர் ராஜேஷ். அவர் சின்ன வயதில் தவறிவிட்டார். அவரும் நடிகர் தான், அவருடன் நான் சில படங்களில் நடித்துள்ளேன் அவர் எனக்கு சிறந்த நண்பர்” என்று தெரிவித்தார்.

Tags : Arjun ,Aishwarya Rajesh ,Chennai ,G. Arulkumar ,GS Arts ,Dinesh Iletshumanan ,Abhirami Venkatachalam ,Praveen Raja ,Loku ,NPKS ,Ram Kumar ,Thangadurai ,Baby Anika ,Prankster Rahul ,Priyadarshini ,Syed ,G.K. Reddy ,P.L. Thenappan ,O.A.K. Sundar ,Vela Ramamoorthy ,Padman ,
× RELATED குற்றம் புரிந்தவன்: வெப்சீரிஸ் விமர்சனம்