சென்னை: அறிமுக இயக்குனர்கள் முகமது சாதிக், அப்துல் ரகுமான் ராஜா இயக்கும் படத்தில் பாண்டியராஜன், அஸ்மிதா உள்பட பலர் நடிக்க உள்ளனர். இது தொடர்பாக, படத்தை தயாரிக்கும் வீகோ கூரியர் நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் பாண்டியராஜன் பேசும்போது, ‘‘ஜென்-ஸி தலைமுறை படுவேகமாக எல்லா துறையிலும் முன்னேறுகிறார்கள். அதிலும் குறிப்பாக சினிமா துறையில் அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார்கள்.
அதற்காக கடுமையாகவும் உழைக்கிறார்கள். இளம் இயக்குனர்களாக வரஉள்ள சாதிக், அப்துல் ரகுமான் ராஜாவும் அந்த வகையறாதான். ஏஐ வந்த பிறகு நிறைய மாற்றங்கள் சினிமாவில் வந்திருக்கிறது. அதையெல்லாம் இந்த படத்திலும் இவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இதில் முக்கிய வேடத்தில் நடிப்பது மகிழ்ச்சி’’ என்றார். இசையமைப்பாளர் ரெஹனா, நடிகை ரஸ்மிகா, அட்வகேட் அடிஷனல் ஜெனரல் ஹாஜா நஸ்ருதீன், வீகோ நிறுவன தலைவரும் தயாரிப்பாளருமான ஜெனோபர் நிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
