- தனுஷ்
- வெற்றிமாறன்
- புராண
- சென்னை
- ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
- லெஜண்ட் சரவணன்
- பாயல் ராஜ்பூத்
- ஷாம்
- விடிவி கணேஷ்
- அரந்தங்கி நிஷா
- பேபி ஐயால்
- ஜார்ஜ் மரியன்
- சந்தோஷ் பிரதாப்
- லால்
- அம்ரிதா ஐயர்
- ஐஸ்வர்யா லட்சுமி
- ஆண்ட்ரியா
- ஜிப்ரான் வைபோதா
- சரவணன் ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ்
சென்னை: ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள படம், ‘லீடர்’. லெஜண்ட் சரவணன், பாயல் ராஜ்புத், ஷாம், விடிவி கணேஷ், அறந்தாங்கி நிஷா, பேபி இயல், ஜார்ஜ் மரியன், சந்தோஷ் பிரதாப், லால், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா லட்சுமி, ஆண்ட்ரியா நடித்துள்ளனர். ஜிப்ரான் வைபோதா இசை. லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. வரும் 3ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லெஜண்ட் சரவணன் பேசியதாவது:
‘தி லெஜண்ட்’ படத்துக்கு பிறகு நான் நடித்துள்ள ‘லீடர்’ படத்தில், அப்பாவி தந்தையும், மகளும் திடீரென்று ஒரு கேங்ஸ்டரிடம் சிக்கி தவிக்கும்போது நடக்கும் சம்பவங்கள்தான் கதை. குத்துப்பாடல்கள் கிடையாது. கதைக்கு ஏற்ற பாடல்கள் இடம்பெற்றுள்ளது. ஜார்ஜியா, ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. கிளைமாக்ஸ் சண்டையை ரயிலில் படமாக்கியபோது எனக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. ஆனால், படப்பிடிப்பு நிற்கக்கூடாது என்று, வலியை பற்றி கவலைப்படாமல் நடித்தேன். சமீபத்தில் படத்தை பார்த்த தனுஷ், வெற்றிமாறன் ஆகியோர், படம் பிரமாண்டமாக இருப்பதாக பாராட்டினர்.
