×

கதையின் நாயகனாக மாறிய வில்லன்

ஹஸ்லர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்துள்ள படம், ‘ரீ யூனியன்’. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் அருள்தாஸ் நடித்துள்ளார். சாட்ஸ் ரெக்ஸ் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார். முக்கிய வேடங்களில் ஜெயக்குமார், அனுபமா குமார், அகில் சந்தோஷ், பர்வீன், சுப்பிரமணியன், ஜெமினி மணி, சிவம், சேதுபதி ஜெயச்சந்திரன், கராத்தே ராஜா, சில்மிஷம் சிவா, குட்டி கோபி, ஹரீஷ், அருண் உதயன், சரத், கிரிஷ் அண்ட் அய்சு, ‘காக்கா முட்டை’ ரமேஷ், பூவையார் நடித்துள்ளனர்.

விக்கி மேக் ஒளிப்பதிவு செய்ய, ராக்கி டிஜே இசை அமைத்துள்ளார். முத்தமிழன் ராமு எடிட்டிங் செய்ய, வெங்கடேஷ் குமார் அரங்கம் அமைத்துள்ளார். கேங்ஸ்டர் பின்னணியில் கமர்ஷியல் எண்டர்டெயினராக படம் உருவாகியுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கிறது. வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த அருள்தாஸ், இப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக மாறியுள்ளார்.

Tags : Karthik Jayas ,Hustlers Entertainment ,Aruldas ,Chats Rex ,Vijay Sethupathi ,Jayakumar ,Anupama Kumar ,Akhil Santhosh ,Parveen ,Subramanian ,Gemini Mani ,Sivam ,Sethupathi Jayachandran ,Karate Raja ,Silmisham Siva ,Kutty Gopi ,Harish ,Arun Udhayan ,Sarath ,Girish and ,Aysu ,Kaaka Muttai' Ramesh ,Poovaiyar ,
× RELATED ஐந்து மணி நேரம் சந்தித்த மம்மூட்டி