வெள்ள அபாய எச்சரிக்கை புல்லூர் தடுப்பணையை தாண்டி பாலாற்றில் சீறிப்பாயும் தண்ணீர்

வாணியம்பாடி: தொடர் மழை காரணமாக தமிழக எல்லையான புல்லூர் பகுதியில் ஆந்திர அரசு கட்டிய பாலாற்று தடுப்பணையை தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரவலான மழை பெய்தது. இதன் காரணமாக, தமிழக எல்லையான வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் ஆந்திர அரசால் கட்டப்பட்டுள்ள 12 அடி உயர தடுப்பணையைத் தாண்டி நேற்று அதிகாலை முதல் அதிகளவு தண்ணீர் வெளியேறி வருகிறது.இதேபோல், நாராயணபுரம் பகுதியில் உள்ள ஜவ்வாது ராமசமுத்திரம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், மன்னாற்றில் அதிக அளவு உபரி நீர் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியில் உள்ள பாலாற்று தரைப்பாலத்தின் அனைத்து கண்மாய்களிலும் வெள்ளநீர் வெளியேறி வருகிறது. இதனால், கிளையாறுகளில் நீர்வரத்து அதிகரித்து சி.எல்.சாலை பகுதியில் போலீசார் பேரி கார்டுகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர். மழை தொடர்ந்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால் கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….

The post வெள்ள அபாய எச்சரிக்கை புல்லூர் தடுப்பணையை தாண்டி பாலாற்றில் சீறிப்பாயும் தண்ணீர் appeared first on Dinakaran.

Related Stories: