இந்தியாவின் முதல் மண்சாலை கார் ரேஸ் படம்

மண்சாலை கார் ரேஸ் படங்கள் ஹாலிவுட்டில் நிறைய வெளிவந்திருக்கிறது. இந்தியாவில் தயாராகும் முதல் படம் மட்டி. தமிழ் உள்பட 6 மொழிகளில் வெளியாகி இருக்கிறது.  இந்தப்படம் டிசம்பர் 10ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் டாக்டர் பிரகபல் இயக்கி உள்ளார்.  பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் இப்படத்தைத்  தயாரித்துள்ளது.

கே.ஜி.எப் படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர்  பிரகபல் கூறியதாவது: குடும்பம், பகை,  பழிவாங்கல் ,ஆக்ஷன் திகில் என்று பல மடிப்புகளில் இப்படக்கதை சுற்றிச் சுழலும்.கே ஜி.எப் போன்று  இப்படம் ஒரு முழு விசையுடனான விறுவிறுப்பைப் பார்ப்பவர்களிடம் உணரவைக்கும் . இதுவரை எத்தனையோ போட்டிகள், பந்தயங்கள் கொண்ட திரைப்படங்களைப் பார்த்திருக்கலாம்.

இதில் வரும் ஜீப் பந்தயம், மண் சாலைப் பந்தயம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ளது. இதுவரை திரை காணாத காட்சி அனுபவமாக அது இருக்கும். இதுவரை கேமரா பார்வை படாத  பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.இப்படத்தின் உருவாக்க பாணி பேசப்படும். படத்தில் பாய்ந்து செல்லும் திரைக்கதை இருக்கை நுனிக்கு இழுத்துக் கொண்டுவரும். என்றார்.

Related Stories: