ரூ.20,00,000 கீழ் எலக்ட்ரிக் சன்ரூப் உள்ள 4 புதிய கார்கள்

கார் வாங்கும் பலர், சன்ரூப் வசதியை விரும்புகின்றனர். காரில் செல்லும்போது காற்று வாங்கவும், வானத்தை வேடிக்கை பார்க்கவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வசதி, குழந்தைகளை குதூகலப்படுத்தும் ஒரு அம்சமாகவும் திகழ்கிறது. பெரும்பாலும் உயர் ரக கார்களில்தான் இந்த வசதி இருந்தது. தற்போது, நடுத்தர கார்களிலும் சன்ரூப் வசதி வந்து விட்டது. எலக்ட்ரிக் மூலம் இயங்கும் இவை, உயர் ரக கார் பயண அனுபவத்தையும் வழங்குகின்றன. ரூ.20 லட்சத்துக்குள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் சன்ரூப் கார்கள்:மாருதி சுசூகி கிராண்ட் விட்டாராமாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா, நடுத்தர எஸ்யுவியாக கடந்த செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. துவக்க ஷோரூம் விலையாக சுமார்  ரூ.10.45 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியருடன் வருகிறது. இதில் உள்ள கே வரிசை 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் மைல்டு ஹைபிரிட் உளள்து அதிகபட்சமாக 102 பிஎச்பி பவரையும் 137 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.ஹூண்டாய் வெனு என் லைன்கடந்த செப்டம்பரில் ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை அறிமுகம் செய்தது. ஷோரூம் விலை சுமார் ரூ.12.16 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 172 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.டாடா நெக்சான் இவி ஜெட் எடிஷன்டாடா நிறுவனம், நெக்சான் இவி ஜெட் எடிஷன் காரை சமீபத்தில் அறிமுகம் செய்தது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.17.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நெக்சான் இவி மேக்ஸ் மற்றும் நெக்சான் இவி பிரைம் என 2 வேரியண்ட்கள் உள்ளன.  ஜெட் எடிஷனில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. நெக்சான் இவி எலக்ட்ரிக் கார் பிரைம் டிரிம்மில் 127 பிஎச்பி பவரையும் 245 என்எம் டார்க்கையும், மேக்ஸ் டிரிம்மில் 141 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.மகிந்திரா எக்ஸ்யுவி 400மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் கடந்த செப்டம்பரில் எக்ஸ்யுவி 400 என்ற காரை அறிமுகம் செய்தது. பூஜ்யத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை 8.3 நொடிகளில் எட்டும் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 456 கி.மீ தூரம் வரை செல்லும். அடுத்த மாதம் சந்தைப்படுத்தப்பட உள்ளது. 3 வேரியண்ட்களில் கிடைக்கும் எனவும், துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.17 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது….

The post ரூ.20,00,000 கீழ் எலக்ட்ரிக் சன்ரூப் உள்ள 4 புதிய கார்கள் appeared first on Dinakaran.

Related Stories: