ஆலியாவும், சமந்தாவும்

தெலுங்கில் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஆலியாபட் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார். அவர் நடித்துள்ள காட்சிகள் 10 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வரைதான் இருக்கும் என்றாலும் அது படமுழுக்க டிராவல் ஆகிற மாதிரியான கேரக்டர் என்கிறார்கள். ஆலியாபட் 10 நாட்கள்தான் நடித்தார் என்றாலும் பல கோடி சம்பளம். காரணம் படத்தின் இந்தி பதிப்புக்கு அவர் முகம் தேவை என்பதால்.

இதேபோல தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் சமந்தா. பாடல் 3 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்படுகிறதாம். சமந்தாவுக்கு ஒரு கோடி சம்பளமாம். இரண்டாம் பாகத்தின் கிளைமாக்சுக்கு முன்னதாக இந்த பாடல் இருக்குமாம்.

Related Stories:

More