×

சமூகப் பிரச்னையை பேசும் படம்

சென்னை: டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் டாக்டர் வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், லெனின் வடமலை எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘யாரு போட்ட கோடு’. நடிகர் பிரபாகரன் மற்றும் மீனாட்சி மெகாலி நடிக்க, துகின் சே குவேரா குழந்தை நட்சத்திரமாக படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஃப்ரைடே பிக்சர்ஸ் வெளியிட்டில் படம் திரைக்கு வர உள்ளது. ஸ்ரீராம் விக்னேஷ், எடிட்டிங். ஜான்ஸ் வி. ஜெரின், ஒளிப்பதிவு. இசை, சௌந்தர்யன் மற்றும் ஜெயக்குமார்.

சமூக சீர்கேட்டிற்கும், மக்களின் பிரிவினைக்கும் துணை நிற்கின்ற அனைத்தையும் அடியோடு அகற்றவேண்டும் என்பதை மென்மையாக கூறியிருக்கிறேன் என்கிறார் இயக்குனர் லெனின் வடமலை. அநேக மக்களின் அத்தியாவசிய ஆசையை திரைக்கதை வடிவில், லெனின் வடமலையால் திரை காட்சிகளாக என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதை படம் காட்டும் என்கிறது படக்குழு. இவர் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி வெற்றியடைந்த ‘கோலி சோடா’ திரைப்படத்தின் இணை இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Teachers Stick Productions ,Dr. ,Vinitha Govindarajan ,Lenin Vadamalai ,Prabhakaran ,Meenakshi Megali ,Dugin Che Guevara ,Friday Pictures ,Sriram Vignesh ,Johns V. Gerin ,Soundaryan ,Jayakumar ,
× RELATED குற்றம் புரிந்தவன்: வெப்சீரிஸ் விமர்சனம்