×

அஜித்தின் ஆர்வத்தை தடுக்க முடியாது: போனி கபூர்

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம், வரும் பொங்கலன்று திரைக்கு வருகிறது. தற்போது படப்பிடிப்பு இல்லாததால் பைக்கில் உலகை சுற்ற முடிவு செய்த அஜித், சமீபத்தில் டெல்லி உள்பட வட மாநிலங்களுக்கு சென்றார். அப்போது இந்தியாவையும், பாகிஸ்தானையும் இணைக்கும் வாகா எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் நேற்று சில போட்டோக்களை வெளியிட்டு, ‘அஜித்தின் ஆர்வத்தை தடுக்க முடியாது. ஒவ்வொரு கனவையும் அவர் நனவாக்கி வருகிறார்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த போட்டோக்களும் அஜித் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Tags : Ajith ,Bonnie Kapoor ,
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!