×

ஒரு நடிகனின் வாழ்க்கை இயக்குனரின் கையில்தான் இருக்கிறது: போண்டா மணி

ராஜராஜதுரை இயக்கியுள்ள படம், முதல் மனிதன். என்எம்எச் இண்டர்நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் உசேன்  தயாரித்துள்ளார். இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள போண்டா மணி பேசும்போது, ‘ஒரு நடிகனின் வாழ்க்கை இயக்குனரின் கையில்தான் இருக்கிறது. என் 25 வருட உழைப்புக்கு இந்தப் படத்தின் மூலம் பலன் கிடைத்துள்ளது. இயக்குனர் ராஜராஜதுரை எனக்கு புது வாழ்க்கையை கொடுத்துள்ளார். நடிகனை யாரும் குறை சொல்லக்கூடாது நடிகன் கேட்டால் ஏன் கேரவன் தருகிறீர்கள்? நீங்கள் இதைத்தான் தருவேன் என்று சொல்லி படம் எடுங்கள். சினிமா பிழைக்கும். இந்த வெற்றி என் உழைப்புக்கு கிடைத்துள்ளது. ஒரு நடிகனுக்கு அடக்கம் இருந்தால் மட்டுமே தொடர்ந்து அவன் சினிமாவில் பிழைப்பான்’ என்று கண் கலங்கினார்.

Tags : Ponda Mani ,
× RELATED நகைச்சுவை நடிகர் போண்டா மணி(60) உடல்நகுறைவால் சென்னையில் காலமானார்.