கன்னட நடிகர் ஷங்கர்ராவ் காலமானார்

சென்னை: பழம்பெரும் கன்னட நடிகர் ஷங்கர்ராவ். காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வந்தார். திரைப்படங்களுடன் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். 84 வயதான ஷங்கர்ராவ் பெங்களூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். ஷங்கர்ராவின் மரணத்துக்கு கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories:

More
>