விக்ரம் படத்தில் பார்வையற்றவர் வேடத்தில் கமல்...!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படம், விக்ரம். விஜய் சேதுபதி, பஹத் பாசில், சித்திரம் பேசுதடி நரேன் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் பார்வையற்றவர் வேடத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே அவர், 1981ல் வெளியான ராஜபார்வை படத்தில் பார்வையற்றவராக நடித்திருந்தார். தற்போது நெற்றிக்கண் என்ற படத்தில் நயன்தாரா பார்வையற்றவர் வேடத்தில் நடித்திருக்கிறார்.

Related Stories:

>