×

விஜய்யை தொடர்ந்து கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி? சம்பவம் செய்ய காத்திருக்கும் "விக்ரம்"

மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக இயக்கும் படம் ‘விக்ரம்’. இப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘விக்ரம்’ படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், இந்த படத்தில் வில்லனாக நடிக்க என்னை அணுகினார்கள் என்றார். ஆனால் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கிறேனா என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உறுதியானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறினார். இதனிடையே பகத் பாசிலும் இந்த படத்தில் இணைந்துள்ளதால், இதில் யார் வில்லனாக நடிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags : Vijay Sethupathi ,Kamal ,Vijay ,Vikram ,
× RELATED ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கு...