×

டைட்டிலை மாற்றிய சசிகுமார்..!

சுப்ரமணியபுரம், ஈசன் படங்களை இயக்கிய பிறகு நடிப்பில் அதிக கவனம் செலுத்தும் சசிகுமார், தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய், எம்ஜிஆர் மகன்,  கத்துக்குட்டி சரவணன் இயக்கும் படம் என, பிசியாக நடித்து வருகிறார். வெற்றிமாறன் தயாரிப்பிலும் நடிக்க இருக்கிறார். அவர் கூறுகையில், ‘எம்ஜிஆர் மகன் படத்தில், எனது தந்தை எம்.ஜி.ராமசாமி என்ற வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டைட்டிலில் எனது பெயருக்குப் பின்னால் சத்யராஜ் பெயர் இடம்பெற்றது. இது எனக்கு வருத்தத்தை அளித்தது.

சத்யராஜ் மாபெரும் நடிகர். அவரது பெயரை முதலில் போடுங்கள் என்று டைரக்டர் பொன்ராமிடம் சொன்னேன். அதைப் புரிந்துகொண்ட அவர், சத்யராஜ் பெயரையே முதலில் போட்டார்’ என்றார். மீண்டும் படம் இயக்குவது எப்போது என்று சசிகுமாரிடம் கேட்டபோது, ‘தற்போது நான் நடித்து முடிக்க வேண்டிய படங்கள் நிறைய இருக்கிறது. மீண்டும் படம் தயாரிப்பது மற்றும் இயக்குவது குறித்து இந்த ஆண்டு யோசிக்க முடியாது. அடுத்த ஆண்டில் அதுபற்றி பேசலாம்’ என்றார்.

Tags : Sasikumar ,
× RELATED கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார்...