×

ஒரே மாதத்தில் பாக்யஸ்ரீ போர்ஸுக்கு 2 படம்

இந்தியில் ‘யாரியான் 2’, ‘சந்து சாம்பியன்’ போன்ற படங்களில் சிறிய வேடத்தில் நடித்தவர் பாக்யஸ்ரீ போர்ஸ். கடந்தாண்டு வெளியான ‘மிஸ்டர் பச்சன்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தனது கவர்ச்சி மற்றும் நடிப்பால் கவனத்தை ஈர்த்த இவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் தேடி வருகிறது. விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘கிங்டம்’ படத்தில் நடித்த இவர் தற்போது, துல்கர் சல்மான் ஜோடியாக ‘காந்தா’ மற்றும் ராம் பொத்தினேனி ஜோடியாக ‘ஆந்திரா கிங் தாலுகா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

‘மிஸ்டர் பச்சன்’ மற்றும் ‘கிங்டம்’ படங்கள் அவருக்கு பெரியளவில் வெற்றியை பெற்று தரவில்லை. இதனால் இந்த மாதம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறார். ஏனெனில் அவர் நடித்த 2 படங்கள் இம்மாதம் திரைக்கு வருகிறது. ‘காந்தா’ வரும் 14ம் தேதியும் ‘ஆந்திரா கிங் தாலுகா’ படம் 28ம் தேதியும் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களும் அவருக்கு பெரியளவில் கை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார் பாக்யஸ்ரீ போர்ஸ்.

Tags : Bakhyasree Porz ,BHAKYASREE PORZ ,Vijay Devarakonda ,Dulkar Salman ,Ram Pothineni ,
× RELATED குற்றம் புரிந்தவன்: வெப்சீரிஸ் விமர்சனம்