×

மாளவிகாவின் பாலிவுட் படம்..!

பாலிவுட்டில் ஒன்று, கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்தவர், மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட, மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்த அவர், கார்த்திக் நரேன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில், தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இதில் நடிப்பதற்கு முன்பே அவர் தனது இரண்டாவது பாலிவுட் படத்தில் நடித்து வந்தார்.

தற்போது அதற்கு தலைப்பு முடிவாகியுள்ளது. இது சம்பந்தமான டீசர் வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன், படத்துக்கு யுத்ரா என்று டைட்டில் வைத்திருப்பதாகவும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீசாகும் என்றும் கூறியுள்ளார். சித்தார்த் சதுர்வேதி ஹீரோவாக நடிக்கும் இதை ரவி உதயவார் இயக்குகிறார்.

கோலிவுட் மற்றும் மல்லுவுட்டை விட டோலிவுட்டிலும், பாலிவுட்டிலும் அதிகமாக சம்பளம் கிடைக்கிறது என்று சொன்ன மாளவிகா, தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்த மும்பையில் வீடு வாங்கியுள்ளார்.

Tags : Malavika ,
× RELATED நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக்...