ஸ்ருதியுடன் காதலா ? சாந்தனு விளக்கம்

சமீபத்தில் தனது 35வது பிறந்தநாளில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார், ஸ்ருதிஹாசன். அதிலிருந்த போட்டோ ஒன்றில், டெல்லியில் வசித்து வரும் இளம் டாட்டூ ஓவியரும், இசைக்கலைஞருமான சாந்தனு ஹசாரிகா என்ற இளைஞரை இறுக அணைத்தபடி போஸ் கொடுத்து இருந்தார். அதைப் பார்த்தவுடன் அதிர்ந்த ரசிகர்கள், ஸ்ருதியின் புதிய காதலன் இவர்தான் என்று கொளுத்திப் போட்டனர். இதனால் சினிமா வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கம்போல் இதை மறுத்த ஸ்ருதி, ‘எனது பெர்சனல் விஷயங்களை தெரிந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டாதீர்கள்’ என்று தனது ரசிகர்கள் மீது பாய்ந்தார்.

ஏற்கனவே லண்டனைச் சேர்ந்த மேடை நாடகக்கலைஞர் மைக்கேல் கார்சேலைக் காதலித்த ஸ்ருதி, அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். இனி நடிப்பில் அதிக கவனம் செலுத்துவேன் என்று சொன்ன அவர், தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக லாபம், தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார், பவன் கல்யாண் ஜோடியாக வக்கீல் சாப் ஆகிய படங்களில் நடிக்கிறார். ஸ்ருதியுடன் பேசப்படும் சாந்தனு ஹசாரிகா கூறுகையில், ‘நானும், ஸ்ருதியும் நல்ல நண்பர்கள். மற்றபடி எங்கள் பெர்சனல் விஷயத்தை வெளியே பேச விரும்பவில்லை. இசை, ஓவியம் குறித்து எங்கள் இருவரது எண்ணங்களும் ஒரேமாதிரியாக இருக்கிறது. அவருடன் என்னுடைய நட்பு தொடரும்’ என்றார்.

Related Stories: