அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு மேலும் 4 பேர் ஒப்புதல்

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு மேலும் 4 பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்ண்டு வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை எடுத்து அதில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட 13 பேரில் திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்ராம், தினேஷ், நரைமுடி கணேசன் உள்ளிட்ட 13 பேரும் கடந்த 1ம் தேதி ஆஜராகினர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி உண்மை கண்டறியும் சோதனைக்கு சத்யராஜ், லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்கிற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகிய 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்த நிலையில் சண்முகம் என்ற நபர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. அன்றைய நாளில் ஆஜராகாமல் இருந்த மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகியோர் 17ம் தேதியான இன்று ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 4 பேரும் இன்று ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது ரவுடிகளின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொள்வதாகவும் அதற்கான நிபந்தனைகள் தாக்கல் செய்வதாக நீதிபதியிடம் வழங்கினார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டதையடுத்து இந்த வழக்கு விசரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்….

The post அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு மேலும் 4 பேர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: