திண்டிவனம் அரசு மருத்துவமனையில் தவறான ஆபரேஷனால் தாய், குழந்தை சாவு: உறவினர்கள் புகார்

திண்டிவனம்: திண்டிவனம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் தாய், குழந்தை உயிரிழந்ததாக காவல்நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஏந்தூரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (29). இவரது மனைவி சந்தியா(24). இவர்களுக்கு கடந்த 2016ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5, 3 வயதுகளில் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 3வது முறையாக கர்ப்பமான சந்தியா பிரம்மதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளார். கடந்த 6ம் தேதி பிரசவத்துக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சந்தியா சேர்த்துள்ளார். அங்கு குழந்தை பிறக்க கடினமாக உள்ளதாக கூறி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சேர்க்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் குழந்தையின் எடை அதிக அளவில் உள்ளதாக கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது பெண் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தை சடலம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. திண்டிவனம் அரசு மருத்துவமனையில் 6ம் தேதி முதல், 9ம் தேதி வரை சிகிச்சையில் இருந்தபோது சந்தியாவுக்கு மயக்கம், வயிற்று வலி அதிகமாக இருந்துள்ளது. எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், 10ம் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, மறுநாள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி சந்தியா நேற்று இறந்துவிட்டார். இதனால் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சையால் தாய், குழந்தை இருவரும் உயிரிழந்ததாக கூறி 50க்கும் மேற்பட்ட உறவினர்கள் ரோசணை காவல் நிலையத்தில் திரண்டு தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்….

The post திண்டிவனம் அரசு மருத்துவமனையில் தவறான ஆபரேஷனால் தாய், குழந்தை சாவு: உறவினர்கள் புகார் appeared first on Dinakaran.

Related Stories: