சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் வீட்டில் ஒரு கிலோ தங்கம் கொள்ளை போன சம்பவத்தில் தெலுங்கானாவில் பதுங்கியிருந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான். தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பது, யாருமில்லா வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல்களின் தொல்லைகள் அதிகமாகி வருகிறது. இதனிடையே சென்னை கீழ்ப்பாக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சாய் வெங்கட் என்பவர் வசித்து வருகிறார். சாய் வெங்கட் குடும்பத்துடன் நேபாளத்துக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட நபர்கள் தொழிலதிபர் வீட்டில் சுமார் 1 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றனர். நேபாளம் சென்ற நிலையில் மாற்று சாவியை பயன்படுத்தி திருடியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வீட்டில் வேலை பார்த்த கருண், ராமு, சங்கர் உள்ளிட்ட 4 ஊழியர்கள் தங்கத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியதாக ரியல் எஸ்டேட் தொழிலதிபர் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தொழிலதிபர் வீட்டில் 1,030 கிராம் தங்கத்தை கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கருண் என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையில் 4 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. …
The post சென்னை கீழ்ப்பாக்கத்தில் 1 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது; 4 சவரன் நகைகள் மீட்பு..!! appeared first on Dinakaran.