பித்ரு தோஷங்களை நீக்கும் தத்தாத்ரேயர் வழிபாடு..!!

தத்தாத்ரேயர் அவதரித்த ஸ்தலம் சுசீந்திரம் என்றும் தாணுமாலயனின் வடிவமே தத்தாத்ரேயர் அம்சம்தான் என்றும் சொல்லப்படுகிறது. பிறந்தது முதலே ஞானவடிவாக விளங்கிய தத்தாத்ரேயர் வேத உபன்யாச ஞானியர்களுக்கு ஸத்குருவாகவும், பிரம்ம யோகியர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வந்தார்.

 

பரசுராமனால் அழிக்கப்பட்ட கார்த்தவீரியார்ஜுனன் இவரது சீடரே. காணாமல் அல்லது திருடு போன பொருட்கள் மீண்டும் கிடைக்க இன்றும் கார்த்த வீரியார்ஜுன மந்திரம் ஜெபிக்கப்படுகிறது. தத்தாத்ரேயரை வழிபட்டால் பித்ரு தோஷங்கள் நீங்கும்.

தத்தாத்ரேயர் வழிபாடு:

ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் ஒரே சமயத்தில் வழிபட்ட பலன் கிட்டும். அவரை வழிபட மனோபலமும் தேக பலமும் கிடைத்து, சந்தான ப்ராப்தியுடன் பதவிப் பேறும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழலாம்.

 

உலகில் வேறெங்கும் இல்லாதவாறு தன்வந்திரி பீடத்தில் மட்டுமே அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி, கார்த்த வீர்யார்ஜூனர் மற்றும் தத்தாத்ரேயருக்கு விசேஷ சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளது தத்தாத்ரேயர் அவதார தினத்தில் ஸ்ரீ தத்தாத்ரேய காயத்ரி மந்திரம் கூறி வணங்கலாம்.

Related Stories: