ஆன்றோர் அமுத மொழி!

ஆசையே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம்; ஆசையற்றவன் அமைதியாக உறங்குகிறான்! ஆசை, அழிவில் கொண்டு போய்விடும்!! தீபத்தின் ஒளி மீது ஆசை கொண்ட காரணத்தினால், அதே தீபத்தில் வீழ்ந்து மடிகிறது விட்டில் பூச்சி! தூண்டிலிலுள்ள சிறு புழுவின் மீதுள்ள ஆசையினால், அதே தூண்டிலில் தன் இன்னுயிரை இழக்கிறது மீன்!!

வேடன் பொறியில் வைத்துள்ள இறைச்சியின் மீது ஆசைப்பட்டு, வலிமை மிக்க புலியும் வேடன் வசமாகிறது!! மகுடியின் நாதத்திற்கு மயங்கி, பாம்பாட்டியிடம் அகப்பட்டுக்கொள்கிறது நாகம்!

படுகுழியின் மேல் பரப்பப்பட்டுள்ள தழைகளின் மீதுள்ள ஆசையினால் பலம் வாய்ந்த யானையும் அதில் வீழ்கிறது!ஆசையை வென்றவனே துன்பமற்று வாழ்கிறான்.

- மகாத்மா விதுரர்,

துரியோதனனுக்கு அருளிய அறிவுரை.

Related Stories: