ஆழ்மனதின் ரகசியத்தை உணர்த்தும் குரோத பைரவர்

மகா பைரவரிடமிருந்து தோன்றிய எட்டு பைரவர்களில் ஐந்தாவதாக விளங்கும் ஸ்ரீகுரோத பைரவர் தென்மேற்குத் திசையில் இருக்கும் வைஷ்ணவி தேவியை அடைந்து அவளுடைய ஆயுதமான சங்கு, சக்கரம் முதலியவற்றையும் வாகனமான கருடனையும் பெற்றுக் கொண்டு அவளுடன் இருந்து உலகைக்

காத்துவருகிறார். அவரிடமிருந்து அவராகவே தோன்றிய எண்மர் உடனிருக்கின்றனர்.

இவர்கள் மேற்குத் திசை, மூல பைரவரான குரோத பைரவரிடமிருந்து தோன்றியதால் குரோத அஜிதாங்க பைரவர்,குரோத ருரு பைரவர், குரோத சண்டபைரவர், குரோத பீஷ்ண பைரவர், குரோத உன்மத்த பைரவர், குரோத பைரவர், குரோத கபாலபைரவர், குரோத பீஷ்ணபைரவர், குரோத சம்ஹார பைரவர் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றனர் இவர்களுக்கென்று புராணங்களில் தனிப் பெயர்களும் வழங்குகின்றன.

இதன்படி இவர்கள், காமபாலர், குரோதர், பிங்கலாட்சர், அப்ரரூபர், தராபாலர், குடிலர், மந்திரநாயகர், ருத்ரர் என்னும் பெயர்களைக் கொண்டுள்ளனர். வழக்கத்தில் இவர்களை திசையின் பெயர், தமது மூலபைரவரான குரோதன் பெயர் வழக்கமான அஷ்டபைரவர் பெயர் சிறப்புப் பெயர் ஆகியவற்றால் போற்றப்படுகின்றனர்.

இதன்படி,

வருண குரோத அஜிதாங்க காமபாலபைரவர்

வருண குரோத ருரு குரோத பைரவர்

வருண குரோத சண்டபிங்கலாட்சணர் பைரவர்

வருண குரோத குரோத அப்ரரூப பைரவர்

வருண குரோத உன்மத்த தராபாலபைரவர்

வருண குரோத கபால குடில பைரவர்

வருண குரோத பீஷ்ண மந்திரநாயக பைரவர்

வருண குரோத சம்ஹார ருத்ர பைரவர்

- என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் திசைபாலகனான வருணனின் ஆயுதமான வருணபாசத்துடன் தமக்கே உரியதான சூலம், பானபாத்திரத்தையும் ஏந்துகின்றனர். அத்துடன் வலது மேல் கையில் தமது மூலபைரவரின் ஆயுதங்களை ஏந்தி வருணனுக்குரிய மகர (பிரேதாசன்) வாகனத்தில் பவனி வருகின்றனர். இவர்களுக்கு அமைந்த சிறப்புப் பெயர்களான காமபாலர், குரோதர், பிங்கலாட்சர், அப்ரரூபர், தராபாலர், குடிலர், மந்திர நாயகர், ருத்ரர் என்பவை இவர்களின்

குணாதிசயங்களைக் காட்டுகின்றன.

இவர்கள் கொண்டுள்ள இப்பெயர்களின் ஆசைகளை காப்பவர். துன்பங்களை நீக்குபவர். பொற்கண்ணர். விசித்திர வடிவானவர். பூமியைக் காப்பவர். கீழ்நோக்கிய பார்வையை உடையவர். மனதின் ஆழத்தில் புதைந்து கிடப்பதை அறிந்து ெசயல்படுவர். மந்திரங்களை கட்டுப்படுத்தி பலன்தரவைப்பவர். தேவையற்றவைகளை அழித்து புதிது புதிதாகப் படைப்பவர்.

இவர்களுக்கு இணையாக விளங்கும் நிருதி திசை அஷ்ட யோகினிகளின் பெயர்கள் ருத்ரவேதாளி, பீஷ்கரி, திரிபுரந்தகி, பைரவி, துவம்சனி, குரோதி, துர்முகி, பிரேதவாகினி என்பதாகும். உபபைரவர்களின் பெயர்களைப் போலவே அவர்களுடன் இருந்து செயலாற்றும் இந்த பைரவிகளான யோகினிகளின் பெயர்களும் பொருள் பொதிந்ததாக உள்ளது.

இந்தப் பெயர்கள் மூலம் மேலான வழியில் செலுத்துபவர் (வேதங்களை ஆள்பவள்) பயத்தை நீக்குபவள், மூன்று புரங்களையும் அழிப்பவள், பகைவர்களுக்கு அச்ச மூட்டுபவள் பகைவர்களுக்கு கொடியமுகம் காட்டுபவள் எதிர்ப்படுபவரின் மனத்தை ஆழ்நிலையில் உறங்கச் செய்துவிட்டு அதில் தனது எண்ணங்களைச் செலுத்தி தன் விருப்பம்போல் செயல்பட வைப்பவள் என்ற செய்திகளை அறியமுடிகிறது.

இந்த பைரவர்கள் எண்மரும் வலது மேல் கையில் அட்டதிக்கு பைரவரிடமிருந்து தோன்றிய வடிவம் என்பதைக் குறிக்க வடக்கிலுள்ள குரோத அஜிதாங்கன் கெண்டி அட்ச மாலையையும், தெற்கில் குரோத ருரு ருருவன் மழுவையும், தென் கிழக்கில் உள்ள குரோத சண்டன் சக்தியாயுதத்தையும், மேற்கில் உள்ள குரோத குரோதன் சக்ராயுதத்தையும், வடமேற்கில் உள்ள குரோத உன்மத்தன் ஏர்க்கலப்பையையும், கிழக்கிலுள்ள குரோத கபாலன் மேல்கையில் வஜ்ராயுதத்தையும் தென்மேற்கிலுள்ள குரோத சண்ட குறுவாளையும் குரோத சம்ஹாரன் கனத்த நெடிய வாளையும்) ஏந்துகின்றனர்.

இவர்கள் வருணனின் வாகனமான மகரத்தினிடமிருந்து தோன்றிய மகரங்களை வாகனமாகக் கொண்டுள்ளனர். மகரம் செல்வத்தின் அடையாளமாகும். வடமொழியில் மகரம் என்பது இந்நாளில் முதலையைக் குறிக்கிறது. புராணங்களில்படி மகரம் என்பது யானை, சிங்கம், முதலை, அன்னம் முதலான ஏழு விலங்குகள் பறவைகளின் தொகுப்பாக அமைந்ததாகும். இது ஆழ்கடலில் வசிப்பது. வருண லோகத்தில் உள்ள அளவற்ற நிதியங்களுக்குப் பாதுகாவலாக இருப்பது. இதனால் வருணன் உலகத்தையே மகராலயம் என்று அழைக்கின்றனர்.

இங்கு மகரவாகனத்தில் பவனிவரும் உப அஷ்டபைரவர்களும் கருட வாகனத்தில் வரும் குரோத பைரவரும் அன்பர்களுக்கு அளவற்ற செல்வங்களை அருள்பவராக உள்ளனர். தன்னைத் தொழும் அன்பர்களுக்கு அளவற்ற வீரதீர ஆற்றலையும் அளவற்ற செல்வங்களையும் அருள்பவர்களாக இந்த எட்டு பைரவர்களுக்கு அவர்களின் மூல பைரவரானகுரோதபைரவரும் விளங்குகின்றனர்.

தொகுப்பு: ஆட்சிலிங்கம்

Related Stories: