7 நாளில் ரூ.500 கோடி; வசூலில் சாதனை படைத்த 2.0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான 2.0 திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலுடன் ரோபோட்டிக்ஸை இணைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியாக ‘2.0’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டது. 2.0’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகளவிலான பாக்ஸ் ஆபீஸில் ரூ.500 கோடி வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

× RELATED ஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா?