3 மாதம் படுக்கையில் இருந்த காஜல் அகர்வால்

உடல்தோற்றத்தை ஸ்லிம்மாக வைத்திருப்பதுடன் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர் காஜல் அகர்வால். சீனியர் நடிகை என்ற லிஸ்டில் இடம்பிடித்திருந்தாலும் இளம் ஹீரோயின்களுக்கு சவால்விடும் வகையில் இன்னமும் கைநிறைய படங்களை வைத்திருக்கிறார். திருமணம் செய்துகொள் என்று காஜலிடம் அவரது குடும்பத்தினர் கேட்டபோதும் திருமணம் காத்திருக்கும் ஆனால் பட வாய்ப்புகள் காத்திருக்காது என்று திருமணத்தையே தள்ளிப்போட்டு விட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் 3 மாதம் படுத்தபடுக்கையாக இருந்ததாக தற்போது ஷாக்கான தகவல் வெளியிட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் 3 மாதம் படுத்தபடுக்கையாக இருந்தேன். ஒரு நாள் மாலையில் எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன் ஆனாலும் காய்ச்சல் குணமாகாமல் பல நாட்கள் தொடர்ந்து இருந்தது.

இதனால் சோர்வடைந்தேன். பரிசோதனை செய்து பார்த்தபோது உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தெரியவந்தது. அதன்பிறகு தீவிரமாக தியானத்தில் ஈடுபட்டதுடன் எதிர்ப்பு சக்தி கூடுவதற்கான சத்து மாத்திரைகளும் எடுத்துக்கொண்டேன். பின்னர் குணம் அடைந்தேன். எனது நிலைமை எப்படி இருந்தது, காய்ச்சல் கண்டிருந்த நேரத்தில் நான் என்ன நிலைமையில் இருந்தேன் என்பது யாருக்கும் தெரியாது’ என்றார்.

× RELATED தயாரிப்பாளர் ஆனார் காஜல் அகர்வால்