ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு: கேரள வேலைநிறுத்தம் எதிரொலி

ஒட்டன்சத்திரம்: கேரளாவில் நடந்த வேலைநிறுத்தம் எதிரொலியாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ரூ.5 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட், தமிழகத்தில் சென்னை கோயம்பேட்டிற்கு அடுத்த பெரிய மார்க்கெட்டாகும். இங்கு சுமார் 150க்கு அதிமான கடைகள் உள்ளன. ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றன. ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான டன் காய்கறிகள் சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா போன்று வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. குறிப்பாக கேரளாவிற்கு 80 சதவீத காய்கறிகள் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் தினமும் அனுப்பப்பட்டு வருகிறது. கேரளாவில் என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் நேற்று வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்ததால் நேற்று முன்தினம் மாலை முதல் காய்கறிகள் அம்மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை. எனவே, நேற்று உள்ளூர் வியாபாரிகள் மட்டும் மார்க்கெட்டிற்கு காய்கறிகளை கொண்டு வந்திருந்தனர். கேரளாவில் வேலைநிறுத்தத்தால் அங்கிருந்து வியாபாரிகள் யாரும் மார்க்கெட்டிற்கு வரவில்லை. இதனால் மார்க்கெட் நேற்று அதிகாலை முதலே வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களாக சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்….

The post ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு: கேரள வேலைநிறுத்தம் எதிரொலி appeared first on Dinakaran.

Related Stories: