×

ஜெய் இயக்கத்தில் யோகி பாபு

சென்னை: ரூக்ஸ் மீடியா சார்பில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘போர்’ என்ற படத்தை தொடர்ந்து உருவாகியுள்ள 2வது படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. கதையின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். மற்றும் மேகா தாமஸ், ஜாஸிக், அஞ்சு நடித்துள்ளனர். ஜெய் எழுதி இயக்கியுள்ளார்.

குற்றாலத்திலுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இளம் தலைமுறையினருக்கான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தை பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர் தயாரித்துள்ளனர். நரேஷ் குமார் ஒளிப் பதிவு செய்ய, பிஜு சாம் இசை அமைத்துள்ளார். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணி கள் நடந்து வருகிறது.

Tags : Yogi Babu ,Chennai ,Arjun Das ,Rooks Media ,Kalidas Jayaram ,Megha Thomas ,Jasik ,Anju… ,
× RELATED நிதி படத்துக்கு கிடைத்த விமோசனம்