×

சிரஞ்சீவியின் 157வது படத்தில் இணைந்த நயன்தாரா

ஐதராபாத்: அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் பிரமாண்டமான படத்துக்கு #Mega157 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருக்கிறது. இதில் சிரஞ்சீவி முழுநீள நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். அர்ச்சனா வழங்க, ஷைன் ஸ்கிரீன்ஸ் சார்பில் சாஹு கரபதி, கோல்ட் பாக்ஸ் எண்டர் டெயின்மெண்ட்ஸ் சார்பில் சுஷ்மிதா கொனிடேலா தயாரிக்கின்றனர். சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

‘சைரா நரசிம்ம ரெட்டி’, ‘காட்ஃபாதர்’ ஆகிய படங்களுக்கு பிறகு சிரஞ்சீவி, நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். சமீர் ரெட்டி ஒளிப்பதிவு செய்ய, பீம்ஸ் சிசிரோலியோ இசை அமைக்கிறார். தம்மிராஜு எடிட்டிங் செய்கிறார். எஸ்.கிருஷ்ணா, ஜி.ஆதி நாராயணா திரைக்கதை எழுதுகின்றனர். அஜ்ஜு மகாகாளி, திருமலா நாக் கூடுதல் வசனங்கள் எழுதுகின்றனர். அடுத்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையன்று படம் திரைக்கு வருகிறது.

Tags : Nayanthara ,Chiranjeevi ,Hyderabad ,Anil Ravipudi ,Sahu Karapathi ,Shine Screens ,Gold Box Entertainment ,
× RELATED நிதி படத்துக்கு கிடைத்த விமோசனம்