×

சீரியஸான என்னை சிரிக்க வைத்த படம் ஏஸ்: ருக்மணி வசந்த்

சென்னை: விஜய் சேதுபதியின் 51வது படமான ‘ஏஸ்’ என்ற படத்தை 7சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆறுமுக குமார் தயாரித்து எழுதி இயக்கி இருக்கிறார். மலேசியாவில் படமாகியுள்ள இது, வரும் 23ம் தேதி ரிலீசாகிறது. பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்க, கிரண் பகதூர் ராவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார். ஹீரோயினாக அறிமுகமாகும் கன்னட நடிகை ருக்மணி வசந்த் கூறியதாவது:

தமிழில் நான் அறிமுகமாகும் ‘ஏஸ்’, என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு படம். விஜய் சேதுபதியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ஷூட்டிங்கில் நடிப்பு சம்பந்தமாக நிறைய டிப்ஸ்கள் கொடுத்தார். எனக்கு தமிழில் பேசத் தெரியாது. மலேசியாவில் நடந்த படப்பிடிப்பில் தமிழ் கற்றுக்கொண்டேன்.

கன்னடத்தில் சீரியஸான கேரக்டர்களில் நடித்த நான், ‘ஏஸ்’ படத்தில் செம ஜாலியான கேரக்டரில் நடித்துள்ளேன். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபுவுடன் நான் நடித்தபோது, ஒவ்வொரு வசனத்தையும் மாற்றி டெவலப் செய்து நடித்ததை பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஷூட்டிங் முடியும் வரை சிரித்துக்கொண்டே இருந்தேன். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறேன்.

Tags : Rukmani Vasanth ,Chennai ,Vijay Sethupathi ,Arumuga Kumar ,7CS Entertainment ,Malaysia ,Justin Prabhakaran ,Kiran… ,
× RELATED 81 வயது இயக்குனரின் கல்லூரி கலக்கல்