×

வெற்றி மேல் வெற்றி தரும் கவசங்கள்

புத கவசம் - 16

பொன்னு கிடைத்தாலும் கிடைக்கும் புதன் கிடைக்குமா ?

சந்திரனின் பிள்ளையான புதனுக்கு சௌம்யன் என்றும் பெயர் உண்டு. புத கிருஹ ஸ்தோத்திரம் படிப்பது ஸர்வக்ர ப்ரீத்தியாகும். விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பது புதனுக்கு சாந்தியாக அமையும்.புதனால் பேச்சாற்றல், சங்கீத ஞானம். கணக்கில் வளர்ச்சி போன்றவையாகும்.புத செய்திரம் மதுரை மூர்த்தி ஸ்ரீசொக்கநாதர் ஆகும்.
ஜோதிடத்தில்  புதனை வித்யாகாரகன் என்பர். கல்வி வளர்ச்சிக்கு  உரியவர் புதன்.  இவர் தான் ஒரு மனிதனின் நரம்பு மண்டலங்களை இயக்குவது. கற்றலில் ஆர்வம் அதிகரிப்பதற்கு  காரணமாகும்.

ஒருவருக்கு புதன் கிரகம்  நன்றாக அமையப் பெற்றவர்கள் யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் சுயமாக முன்னேறுவார்கள். ஆனால் இவர்கள் கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். பொது இடங்களில்  பேசும் போது கூட முதலில் பேசத் தயங்கி , அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனித்து கேட்ட பின்னரே இவர்கள் பேசுவார்கள். ஆனால் இதற்கு மாறாக  தேர்வின் போது சரியான பதிலை எழுதுவதற்கு இவர்கள் துளியும்  தயங்க மாட்டார்கள்.

விடாமுயற்சி, வணிகம், மற்றும் பங்கு வர்த்தகத்தில் வெற்றி பெறுபவர்கள் ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்கும்.அதேநேரத்தில் புதன் வலுவிழந்து காணப்பட்டால் அந்த ஜாதகர் பங்குச்சந்தையில்  எவ்வளவு முதலீடு செய்தாலும் லாபம் பார்ப்பது கடினம்தான். தூதுக்கோள் என்றும் புதன் அழைக்கப்படுகிறது.புதனின் ஆதிக்கம் உள்ளவர்களிடம்  எதிரிகள் கூட பகைத்துக் கொள்ளமாட்டார்கள். இதற்கு ஒரு காரணம் மனிதாபிமானமாகும்.

எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் புதன் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு மற்றவர்களின் பாராட்டு இவர்களுக்கு கிடைக்காது. உதாரணமாக அலுவலகத்திலேயே சிறந்த பணியாளர் எனப் பெயர் பெற்றிருந்தாலும் பதவி உயர்வு கிடைக்காது. புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இதுபோன்ற துரதிருஷ்டமும் ஏற்படும்.சிறுவயதில் புதன் தசை வந்தால் சிறப்பான கல்வி கிடைக்கும். நடு வயதில் புதன் தசை வந்தால் வியாபாரத்தில் செல்வம் கொழிப்பார்கள். முதிய வயதில் புதன் தசை நடந்தால் புத்தகங்கள் எழுதிக் குவிப்பார்கள்.

கணிதத்திற்கு உரியவரும் புதன். ஒருவர் ஜாதகத்தில் புதன் நல்ல ஆதிபத்தியம் பெற்று, நல்ல கிரக சேர்க்கைகளுடன் இருந்தால் அவர்கள் ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியராக இருப்பார்கள்.
புதன் நன்றாக இருந்தால் அவர்கள் ஆய்வுப் படிப்புகள் மேற்கொள்வார்கள். கல்விக் கூடம் நடத்துவதற்கும் புதனின் தயவு தேவை. வில் வித்தைக்கு மட்டுமின்றி அனைத்து உள்ளரங்க விளையாட்டுகளுக்கும் உரியவர் புதன். திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள் என்பதால் சதுரங்க விளையாட்டில் நல்ல திறமை பெற்றிருப்பார்கள்.

அனைத்தையும் அறிந்து கொள்வது அறிவு என்பதாகும். மற்ற உயிர்கள் அனைத்தும் ஐந்தறிவிற்குள்ளாகவே அடங்கி விடுகிறது. ஆனால் மனிதன் தனது மூளையை பயன்படுத்தி சிந்திக்கும் அறிவே ஆறாவது அறிவு என்கிறோம். ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு மனிதனுக்கு இத்தகைய அறிவாற்றலை தரும் கிரகமாக புதன் கிரகம் இருக்கிறது.ஆகவே ஆன்மிக பலன் வாசகர்கள் புதன் கவசம் நாள்தோறும் படித்தால்  கல்வி, பேச்சாற்றல், வணிகம், கணிதம்... போன்ற துறையில் நல்ல வளர்ச்சி அமைவதாக நம்பப்படுகிறது.

புத கவசம்

அஸ்யஸ்ரீ புத கவசஸ்ய காத்யாயந ரிஷி: அதுஷ்டுப் சந்த: புதோ தேவதா யம்பீஜம் க்லீம் சக்தி: ஊம் கீலகம் புத க்ரஹ ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:
த்யானம்
புதம் புஸ்தக ஹஸ்தஞ்ச-குங்குமஸ்ய ஸமத்யுதிம்
புதம் ஞானமயம் ஸர்வம்-குங்குமாபம் சதுர்புஜம்
கட்கசூல கதாபாணிம்-வரமுத்ராங்கித ப்ரபும்
பீதாம்பரதரம் தேவம்-பீதமால்யானுலேபனம்
வஜ்ராதி ஆபரணோபேதம்-கிரீட மகுடோஜ்வலம்
ச்வேதாச்வரதமாருஹ்ய-மேரும் யாந்தம்.

நவக்ரஹங்களில்
புதன்-கவச மந்த்ரம்
பீதாம்பரதர: பாது-பீத மால்யானு லேபன:
புத: பாது சிரோதேசம்-ஸௌம்ய: பாதுசபாலகம்
நேத்ரே க்ஞான மய: பாது-ச்ருதிம் பாது இந்துநந்தந:
க்ராணம் கதாதர: பாது-புஜெள புஸ்தக பூஷித:
மத்யம் பாது ஸுராத்ய:-பாது நாபிம் ககேச்வர:
கடிம் கலாத்மஜ: பாது-பாது சோரூ ஸுரேச்வர:
ஜானுநீ ரோஹிணீ ஸூநு:-பாது ஜங்கே பலப்ரத:
பாதௌ பாணாஸக:-பாது பாது ஸௌம்யோ அகிலம் வபு:
மறுபடி அங்கந்யாஸாதிகளைச் செய்யவும்.

பலச்ருதி:
இந்த கவசம் மிகப் புண்யமானது. ஸகல உபத்ரவங்களையும் நோய்களையும் அகற்றவல்லது என்று நம்பப்படுகிறது.

அனுஷா

Tags :
× RELATED காமதகனமூர்த்தி