உத்தமபாளையம் : தேனி மாவட்ட அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் புட் செல் எஸ்.பி. ஆய்வு செய்தார்.பெரியகுளம் பகுதிகளில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் உரிய எடையில் பெறப்படுகிறதா, இதன் ஆவணங்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆய்வில் உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை (புட் செல்), மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மற்றும் உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அதிகாரிகள் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் மற்றும் ஜெயமங்கலம் பகுதிகளில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் சோதனை செய்தனர். மேலும், இந்தாய்வின்போது, நெல் இருப்பு மற்றும் நெல் கொள்முதல் நிலைய பராமரிப்பு பற்றி நெல் விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்….
The post பெரியகுளம் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் புட்செல் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.
