திருவொற்றியூர்: மாதவரம் மண்டல குழு மாதாந்திர வார்டு கூட்டம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மண்டல குழு தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். உதவி ஆணையர் முருகன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் செய்யப்பட வேண்டிய பணிகள் விவரங்களை முன் வைத்தனர். 29வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன் எழுந்து `மாதவரம் தட்டாங்குளம் சாலை – கணபதி தோட்டம் இணைக்கக்கூடிய ஜிஎன்டி சாலையில் தடுப்புகள் போட்டு அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வெகு தூரம் சென்று வளைவில் திரும்ப வேண்டி உள்ளது. எனவே இந்த இணைப்பு சாலையில் நடைபாதை மற்றும் வாகனங்கள் திரும்பும் வசதியை ஏற்படுத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். அதற்கு தலைவர் நந்தகோபால் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்தார். அதனை தொடர்ந்து மாதவரம் ஆந்திரா பஸ் நிலையத்தில் பொதுக் கழிப்பிடம் சீரமைத்தல், திருவள்ளுவர் தெருவில் உள்ள குழந்தைகள் விளையாட்டு திடலை மேம்படுத்துதல் உள்ளிட்ட சுமார் ரூ.4.5 கோடி மதிப்பிலான 35 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன. …
The post மாதவரம் மண்டல குழு கூட்டம் ரூ.4.5 கோடியில் திட்ட பணிகளுக்கு தீர்மானம் appeared first on Dinakaran.