அணியக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது மட்டுமே பிரச்னை: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: ‘கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது பற்றி மட்டும்தான் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது,’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றமும், அரசின் உத்தரவு செல்லும் என்று அறிவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா முன்னிலையில் இது விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றும்படி கோரினார். மேலும், ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்படுவது, அரசியல் சட்டப் பிரிவு 19, 21 மற்றும் 25ல் அளிக்கப்பட்டுள்ள உரிமையை பறிக்கும் செயலாகும் என்று வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், ‘ஹிஜாப் அணிவதற்கு யாரும் தடை விதிக்கவில்லை. அது பற்றி கேள்வியும் எழுப்பவில்லை. கல்வி நிலையங்களில் அதை அணிவதற்கு தான் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அது பற்றி மட்டுமே இந்த வழக்கு கேள்வி எழுப்புகிறது,’ என தெரிவித்தனர்….

The post அணியக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது மட்டுமே பிரச்னை: உச்ச நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: