ஜோதிடம் என்பது காலக்கணிதம் காலம்தான் ஒரு விவசாயின் விவசாயச் செயல்களை நிர்ணயிக்கிறது. காலம் தவறினால் பயிரும் தவறி விடுகிறது. எனவே விவசாயி காலத்தை அறிந்து பயிர் செய்ய வேண்டும் ஜோதிடத்தின் அடிப்படையான இரண்டு ஒளிக் கிரகங்கள் சூரியனும் சந்திரனும். இவைகள் பலமாக இருந்தால் விவசாயத்தில் நல்ல லாபத்தை அடையலாம். மற்ற கோள்கள் பரிவார தேவதைகளைப் போல அருள் தரும்.
விவசாயம் செய்வதற்கு நாளும் கோளும் முக்கியம். எனவே பஞ்சாங்கம் பார்த்து பயிர் செய்யும் கலையை மனிதகுலம் தெரிந்து வைத்திருந்தது.
அந்த அடிப்படையில் ஒவ்வொரு காரியத்திற்கும் ஏற்ற நாட்கள் இவை
1. உழவுத் தொழில் ஆரம்பிக்க ஏற்ற நாட்கள் ரோகிணி, புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், மூலம், பூராடம், உத்திராடம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் நன்று. திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி, முதலிய திதிகளும், ரிஷபம், மிதுனம், கடகம், மகரம், மீனம் முதலிய லக்னங்கள் ஏற்றது. 2. எரு இட ஏற்ற நாட்கள் திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி, முதலிய நட்சத்திரங்கள். துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி முதலிய திதிகள். ரிஷபம், மிதுனம், கடகம், மகரம், மீனம் முதலிய லக்னங்கள் நல்லது. பூமிகாரகனுக்கு உரிய நாளான செவ்வாய்க்கிழமை நல்லது.3. விதை விதைக்க ஏற்ற நாட்கள் ரோகிணி, பூசம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி, முதலிய நட்சத்திர தினங்கள் ஏற்றவை. திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி உத்தமம். ரிஷபம், கடகம், சிம்மம், மீனம் ஏற்ற லக்னங்கள். எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். பாதாள யோகினி கூடாது. ஜென்ம நட்சத்திரம் கூடாது. 4. கதிர் அறுக்க ஏற்ற நாட்கள் பரணி, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், மகம், உத்திரம், அஸ்தம், விசாகம், அனுஷம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி, முதலிய நட்சத்திரங்களும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி, பௌர்ணமி முதலிய திதிகளும் நன்று. ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம் முதலிய லக்னங்கள் அருமை. சனிக்கிழமை விசேஷம். சுமங்கலி அல்லது கன்னிப்பெண்ணை முன்னிட்டுக் கொண்டு இதைச் செய்ய வேண்டும். 5. தானியம் களஞ்சியத்தில் வைப்பதற்கு ஏற்ற நாட்கள் பரணி, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, மகம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி முதலிய நட்சத்திரங்களும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பவுர்ணமி திதிகளும் நன்று. ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய லக்னங்கள் நன்று.6. தானியங்களை செலவிட ஏற்ற நாட்கள் அசுவினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி முதலிய நட்சத்திரங்கள் நன்று. துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் நன்று. ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் முதலிய லக்னங்கள் நன்று. சனிக்கிழமை நல்ல நாள். வெள்ளிக்கிழமை கூடாது. 7. மாடு முதலான கால்நடைகளை வாங்கவும் கொடுக்கவும் ஏற்ற நாட்கள் விசாகம், அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி, அசுவினி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி முதலிய நட்சத்திரங்கள் நன்று. துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பௌர்ணமி ஆகிய திதிகள் நன்று. சிம்மம், தனுசு, மகரம் ஆகிய லக்னங்கள் நன்று. எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். மாடுகளை கொடுக்கும்போது புதன்கிழமை, வெள்ளிக்கிழமை கொடுக்கக் கூடாது.