தனியாருக்கு 35 ஆண்டுக்கு ரயில்வே நிலங்கள் குத்தகை: ஒன்றிய அரசுக்கு ஊழியர்கள் எதிர்ப்பு

புதுடெல்லி: ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு 35 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது. இதற்கு. ரயில்வே ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ரயில்வே நிலங்களை 35 ஆண்டுகள் வரை தனியாருக்கு குத்தகைக்கு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், நிலத்தின் மதிப்பில் 1.5 சதவிகிதத்தை மட்டுமே குத்தகை தொகையாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிலங்களை நீண்டகால குத்தகைக்கு விடுவதால், நாடு முழுவதும் 300 சரக்கு கையாளும் முனையங்கள் அமைய வாய்ப்புள்ளது. இதன் மூலம், ரயில்வே சரக்கு போக்குவரத்து அதிகரிப்பதுடன் தொழில்துறையின் சரக்கு போக்குவரத்திற்கான செலவு குறையும். ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும். மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகம், தொலை தொடர்பு கேபிள், சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பொதுப்பணிகள், வளர்ச்சியடையும். 1.2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், ‘நீண்ட காலத்துக்கு குத்தகைக்கு விடும் ஒன்றிய அரசின் இந்த முடிவு தனியார் ஏகபோக உரிமைக்கு வழிவகுக்கும். இதுவும் ரயில்வேயை தனியாருக்கு தாரைவார்க்கும் ஒரு முயற்சிதான்,’ என்று ரயில்வே ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரயில்வே நிலங்கள் தற்போது தனியாருக்கு 5 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு அளிக்கப்படுகிறது. …

The post தனியாருக்கு 35 ஆண்டுக்கு ரயில்வே நிலங்கள் குத்தகை: ஒன்றிய அரசுக்கு ஊழியர்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: