போந்தவாக்கம் கிராமத்தில் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்; எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: போந்தவாக்கம் கிராமத்தில் திமுக  மாவட்ட இளைஞரணி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் போந்தவாக்கம் கிராமத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக  இளைஞரணி ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன்  தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி  அமைப்பாளர் உதயசூரியன்  வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி,  ஒன்றிய செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர்,  பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள்  கே.வி.லோகேஷ், தில்லைகுமார்,  ஆனந்தகுமார்,  மோகன்பாபு, முரளிதரன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக  மாநில இளைஞரணி துணை செயலாளரும், திருவிக நகர்  எம்எல்ஏவுமான  தாயகம் கவி கலந்துகொண்டு உறுப்பினர் படிவம் வழங்கி  சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் வீடுகள் தோறும் திமுக அரசின்  சாதனைகளை சொல்லி  இளைஞரணியில் உறுப்பினர்கள் சேர்த்தல். தமிழகத்திலேயே திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில்  அதிக உறுப்பினர்களை சேர்ப்பது  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய, பேரூர்  செயலாளர்கள் மணிபாலன், ஆ.சத்தியவேலு, ஜெகதீசன், முத்து, சுரேஷ்,  பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத்,  துணைத்தலைவர்  குமரவேல், மாவட்ட பிரதிநிதி  சிவய்யா, மாவட்ட கவுன்சிலர் சுதாகர், முனுசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில்,  ஊராட்சி மன்ற தலைவர் குமார் நன்றி கூறினார். …

The post போந்தவாக்கம் கிராமத்தில் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்; எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: