அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதிக்க கோரி தலித் மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தலித் மக்கள் முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நேற்று நடந்தது. அந்த அமைபின் மாவட்ட தலைவர் எம்.சின்னைப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காபிரியேல், சைமன் சத்தியா, ரமேஷ்பாபு, செல்வம், அம்தே அரசு,  குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அமைப்பு செயலாளர் ஆறு கஜேந்திரன். வரவேற்றார். இதில், 100க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். இந்த, ஆர்பாட்டத்தில் தலித் மக்கள் முன்னணி தலைவர் வழக்கறிஞர் மு.சு.திருநாவுக்கரசு,  இந்திய குடியரசு கட்சி தலைவர்  செ.கு.தமிழரசு ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.  பள்ளிப்பட்டு, கொடிவலசா, வீர்மங்கலம் ஆகிய பகுதிகளில் அம்பேத்கர் சிலை அமைக்க தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் அனுமதி மறுத்து வருவதால், வட்டாட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் சிலைகள் முடங்கியுள்ளது.  திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் திமுக ஆட்சியில் அம்பேத்கர் சிலைகள் அமைக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், பள்ளிப்பட்டு ஒன்றியம் ராமசமுத்திரம் பெரியார் சமத்துவபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சமத்துவபுரம் வீடுகள் தகுதியான பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநில துணைத் தலைவர்  முனுசாமி, மாநில செயலாளர்  ரமேஷ்குமார், மாநில நிதி செயலாளர் பாண்டியன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர். தலித் மக்கள் முன்னணி ஆர்பாட்டத்தையோட்டி காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையில்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்….

The post அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதிக்க கோரி தலித் மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: