பாஃப்டா விருதுகளில் சாதித்த கான்க்லேவ்: இந்திய படம் வெளியேறியது

லண்டன்: சினிமா உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதான பாஃப்டா (பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள்) 2025 விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை லண்டனில் ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் வாடிகன் நாடகத் திரைப்படம் ‘கான்க்லேவ்’ நான்கு விருதுகளை வென்றது, இதில் சிறந்த படம் மற்றும் சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம் ஆகிய விருதுகள் அடங்கும். பாயல் கபாடியாவின் ‘ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட்’ இந்திய திரைப்படம் விருதைத் தவறவிட்டது.

சிறந்த ஆங்கிலம் அல்லாத மொழிப் பிரிவில் பாயலின் படம் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் அது ஸ்பானிஷ் மொழி படமான ‘எமிலியா பெரெஸ்’ படத்திடம் தோற்றது. பாஃப்டா விருது வென்றவர்களின் விவரம்: சிறந்த படம் – கான்க்லேவ். சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம் – கான்க்லேவ். சிறந்த இயக்குனர் – பிராடி கோர்பெட், தி புருடலிஸ்ட். சிறந்த நடிகர் – அட்ரியன் பிராடி, தி புருடலிஸ்ட். சிறந்த நடிகை – மிக்கி மேடிசன், எனோரா. சிறந்த துணை நடிகர் – கீரன் கல்கின், எ ரியல் பெய்ன்.

சிறந்த துணை நடிகை – ஜோ சால்டனா, எமிலியா பெரெஸ். ரைசிங் ஸ்டார் விருது (மக்களால் வாக்களிக்கப்பட்டது) – டேவிட் ஜான்சன். சிறந்த ஆங்கிலம் அல்லாத படம் – எமிலியா பெரெஸ். சிறந்த இசை – டேனியல் ப்ளம்பெர்க், தி புருடலிஸ்ட். சிறந்த ஒளிப்பதிவு – லோல் க்ராலி, தி புருடலிஸ்ட். சிறந்த படத்தொகுப்பு – கான்க்லேவ். சிறந்த ஆவணப்படம் – சூப்பர் மேன்: தி கிறிஸ்டோபர் ரீவ் ஸ்டோரி. பாஃப்டா பெல்லோஷிப் – வார்விக் டேவிஸ். அசல் இசை : தி புருடலிஸ்ட். தயாரிப்பு வடிவமைப்பு : விக்கெட்.

Related Stories: