×

எக்ஸ்ட்ரீம் விமர்சனம்

புதிய கட்டிடம் உருவாகி வரும் மாடியிலுள்ள ஒரு தூணில், இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. இதையடுத்து விசாரிக்கும் போலீசார், அப்பெண் அபி நக்‌ஷத்திரா என்று கண்டுபிடிக்கின்றனர். இதற்கான பின்னணி என்ன என்பதை சொல்லும் கிரைம் திரில்லராக படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. தனி மனித சுதந்திரம், மாடர்ன் லைஃப் என்ற பெயரில், சோஷியல் மீடியாக்களில் சில பெண்கள் நடத்தி வரும் அநாகரீக செயல்கள், அவர்களை மட்டுமின்றி, சில அப்பாவி பெண்களையும் எப்படி பாதிக்கிறது என்பதை சமூக அக்கறையுடன் ராஜவேல் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேரக்டரில் ரச்சிதா மகாலட்சுமி கெத்து காட்டி நடித்திருக்கிறார். அபி நக்‌ஷத்திரா, பரிதாபத்தை அள்ளுகிறார். படம் முழுக்க வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நாகராஜ், தோற்றத்தில் சீமான் மாதிரி இருப்பதுடன், அவரைப் போலவே கம்பீரமாகவும் நடித்துள்ளார். மாடர்ன் கேர்ளாக வந்து ரசிகர்களை உசுப்பேற்றி இருக்கிறார், அம்ரிதா ஹால்டர்.

மற்றும் சிவம் தேவ், அனந்த் நாக், சரிதா, ராஜேஸ்வரி ராஜி ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் டி.ஜே.பாலா, இசை அமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ் பிரதாப், எடிட்டர் ராம் கோபி ஆகியோரின் கூட்டணி பலம். இறுதிவரை கொலையாளி யார் என்ற சஸ்பென்சும், கொலைக்கான காரணத்தை யூகிக்க முடியாதபடி இருப்பதும் சிறப்பு. கிளைமாக்ஸ் மட்டும் இன்னொரு படத்தை நினைவுபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

Tags : Abhi Nakshatra ,
× RELATED பான் இந்தியா படத்தில் நடிக்கும் அஞ்சலி