×

ஈகோ பிரச்னையை பேசும் மெட்ராஸ்காரன்

சென்னை: ‘மெட்ராஸ்காரன்’ படம் வரும் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது. படம் குறித்து இயக்குனர் வாலி மோகன்தாஸ் கூறியது: ஷேன் நிகாம், கலையரசன் என இருவருக்கும் இடையிலான ஈகோ பிரச்னை தான் படம். அதனால் இருவரின் வாழ்க்கையும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை விறுவிறுப்பாக படம் சொல்லும். சாம் சி.எஸ்ஸின் சிறப்பான பின்னணி இசையுடன் பரபரப்பாக காட்சிகள் நகரும். புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு வரும் இளைஞன், இங்கு வேலை செய்கிறான். தனது திருமணத்துக்காக புதுக்கோட்டைக்கு செல்லும்போதுதான் அந்த பிரச்னையில் சிக்குகிறான்.

அந்த வேடத்தில்தான் ஷேன் நிகாம் நடித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். அவரின் ‘இஷ்க்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆர்டிஎக்ஸ்’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தற்போது அவர் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். நிஹாரிகா ஹீரோயினாக நடித்துள்ளார். த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை எஸ்ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.ஜெகதீஸ் தயாரிக்கிறார். விட்டுக்கொடுப்பது, கோபத்தை அடக்கிக் கொள்வது இதுதான் வாழ்க்கை என்ற மெசேஜ் படத்தில் இருக்கும்.

Tags : Chennai ,Vali Mohandas ,Shane Nigam ,Kalaiyarasan ,
× RELATED சென்னையிலிருந்து பெங்களூருக்கு...