×

கணவரை பிரிகிறார் ஏஞ்சலினா ஜூலி

ஹாலிவுட் முன்னணி ஹீரோயின் ஏஞ்சலினா ஜூலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் 2014ல் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை காதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. தவிர, போரில் அகதிகளான 3 குழந்தைகளை தத்தெடுத்தனர். மொத்தம் 6 குழந்தைகளை வளர்த்து வந்தனர். ஏஞ்சலினா ஜூலியும், பிராட் பிட்டும் கருத்து வேறுபாடு காரணமாக, 2016ல் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு 8 வருடங்களாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுநாள்வரை 6 குழந்தைகளுக்கான பொருளாதார செலவை இருவரும் பகிர்ந்து வந்தனர்.

இருவருக்கும் பிரான்சில் சொந்தமான ஒயின் தொழிற்சாலை இருக்கிறது. 6 குழந்தைகளையும் யார் கவனிப்பது மற்றும் ஒயின் தொழிற்சாலையைப் பங்கிட்டுக்கொள்வது என்பது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படாததால், விவாகரத்து வழக்கில் 8 வருடங்களாக தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஏஞ்சலினா ஜூலி, பிராட் பிட் இருவரும் பங்கீடு தொடர்பாக இறுதி முடிவை எட்டியுள்ளனர். ஏஞ்சலினா ஜூலியின் வழக்கறிஞர் ஜேம்ஸ் சைமன், இருவரும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்திருப்பதை உறுதி செய்துள்ளார்.

எனவே, விரைவில் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கும் என்று தெரிகிறது. 2003ல் ‘மிஸ்டர் அன்ட் மிஸஸ் ஸ்மித்’ என்ற படத்தில் இணைந்து நடித்தபோது ஏஞ்சலினா ஜூலி, பிராட் பிட்டுக்கு இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து 10 வருடங்கள் காதலித்து, 2014ல் திருமணம் செய்துகொண்டனர்.

Tags : Angelina Jolie ,Hollywood ,Brad Pitt ,
× RELATED 8 ஆண்டுக்கு பின் இறுதி கட்டத்தை எட்டிய...