இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான முதல் சுற்று தேர்தலில் ரிஷி சுனாக் வெற்றி: இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு

லண்டன்: இங்கிலாந்தில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கிறிஸ் பின்சரை கன்சர்வேடிவ் கட்சியின் துணை கொறடாவாக நியமித்த பிரதமர் போரிஸ் ஜான்சனை கண்டித்து அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என 50 பேர் அடுத்தடுத்து பதவி விலகினர். இதைத் தொடர்ந்து ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  தற்போது தற்காலிக பிரதமராக உள்ளார். நாட்டின் புதிய பிரதமருக்கான போட்டியில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 11 பேர் களமிறங்கி உள்ளனர். இதில் முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனாக், வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன. சுனாக்கிற்கு அதிக வெற்றி வாய்ப்பு இருந்த போதிலும், அவர் இந்திய, வெளிநாட்டு வம்சாவளி பூர்வீகத்தை சேர்ந்தவர் பிரச்னை முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும் காலக்கெடு நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்த நிலையில் சஜித் ஜாவித் உள்பட 3 பேர் போட்டியில் இருந்து பின்வாங்கினர். இதன் மூலம் கட்சித்தலைவர் பதவிக்கான முதற்கட்ட தேர்தலில் 8 போட்டியாளா்கள் இருந்தனா். இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று வாக்குப்பதிவில் கன்சர்வேட்டிங் கட்சியின் 358 எம்பிக்கள் வாக்களித்தனர். இதில் 88 வாக்குகள் பெற்று ரிஷி சுனாக் முதலிடம் பிடித்து அடித்து சுற்றுக்கு முன்னேறினார். 67, வாக்குகள் பெற்று பென்னி மோர்டான்ட் இரண்டாவது இடத்தலும், 50 வாக்குகள் பெற்று லிஸ் டிரஸ் 3ம் இடத்திலும் உள்ளனர். இன்று இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெறுகிறது. கடைசி இருவா் தோந்தெடுக்கப்படும் வரை பலசுற்றுகளாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. …

The post இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான முதல் சுற்று தேர்தலில் ரிஷி சுனாக் வெற்றி: இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: