ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்: ஹைப்பர் லிங்க் கதையில் 4 ஹீரோயின்கள்

சென்னை: ஃபிரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த், ட்ரீம் ஹவுஸ் ஹாரூண், பிஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் பிஜிஎஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’. பிரசாத் முருகன் எழுதி இயக்கியுள்ளார். பரத், ஷான், ராஜாஜி, அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி, மிருதுளா சுரேஷ், தீக்‌ஷா, கனிஹா நடித்துள்ளனர்.

காளிதாஸ், கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பு கே.எஸ்.கே.செல்வகுமார். படம் குறித்து பரத் கூறியதாவது: இது ஒரு ஹைப்பர் லிங்க், நான்லீனியர் படம். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து 4 கதைகள் நடக்கிறது. எல்லாவற்றிலும் ஒரு துப்பாக்கி இணைந்து வருகிறது. இதுதான் படத்தின் முக்கிய கேரக்டர். தற்போது தமிழ் சினிமா வேறொரு இடத்துக்குச் சென்றுவிட்டது.

இப்படமும் புதுமையான அனுபவமாக இருக்கும். இசை மற்றும் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் ரசிகர்களை ஏமாற்றாது. நானும் இப்படத்தைப் பெரிதும் நம்பி காத்திருக்கிறேன். முதல்முறையாக ஆட்டோ டிரைவராக நடித்திருக்கிறேன். நேற்றுடன் நான் திரைத்துறைக்கு வந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ‘பாய்ஸ்’ படத்தில் தொடங்கிய பயணம், தொடர்ந்து தமிழ், கொங்கணி, இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில், 53வது படங்களில் நடித்துள்ளேன்.

The post ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்: ஹைப்பர் லிங்க் கதையில் 4 ஹீரோயின்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: