கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் குழந்தை கண்ணப்பா லுக் ரிலீஸ்

ஐதராபாத்: விஷ்ணு மன்ச்சுவின் மகனும், நடிகர் மோகன் பாபுவின் பேரனுமான அவ்ராம் மன்ச்சு, ’கண்ணப்பா’ என்ற படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். கிருஷ்ண ஜெயந்தியைெயாட்டி, குழந்தை கண்ணப்பா வேடத்தில் நடிக்கும் அவ்ராமின் பர்ஸ்ட் லுக்கை நேற்று படக்குழு வெளியிட்டது. சிவபெருமானின் மதிப்பிற்குரிய பக்தரான பக்த கண்ணப்பாவின் கதையாக இப்படம் உருவாகிறது.

இதில் விஷ்ணு மன்ச்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளம் கண்ணப்பா வேடத்தில் அவரது மகன் அவ்ராம் மன்ச்சு நடிக்கிறார். இப்படத்தில் மோகன்லால், பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன் பாபு, சரத்குமார், பிரம்மானந்தம், காஜல் அகர்வால் உள்பட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருக்கிறது. 24 பிரேம்ஸ் பேக்டரி மற்றும் ஏவிஏ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இப்படம் உருவாக்கப்படுகிறது.

The post கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் குழந்தை கண்ணப்பா லுக் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: