ஜோலார்பேட்டை அருகே வெங்கடேஸ்வரர் கோயிலில் கருவறையில் சுவாமி சிலை மீது வீசிய சூரிய ஒளி

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே வெங்கடேஸ்வரர் கோயில் கருவறையில் சுவாமி சிலை மீது சூரிய ஒளி வீசியதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே குடியானகுப்பம்  பகுதியில் வெங்கடேஸ்வரர் கோயில் புதிதாக கட்டப்பட்டு கடந்த மாதம் 13ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோயிலில் கருடாழ்வார், விநாயகர் சன்னதிகளும் உள்ளது. இதில் தினந்தோறும் மற்றும்  ஒவ்வொரு சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது.

Advertising
Advertising

இந்நிலையில், வழக்கம் போல் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை கோயில் பூசாரி நாராயணன் கோயிலை திறந்து சிறப்பு பூஜை செய்தார்.  அப்போது,  காலை 7.30 மணி முதல் 7.40 மணி வரை கருவறையில் உள்ள வெங்கடேச பெருமாள் சிலை  மீது சூரிய ஒளி வீசியது. இந்த அதிசயத்தை கண்டு அர்ச்சகர் பரவசமடைந்தார்.

பின்னர், இதுகுறித்து கோயில் பூசாரி அங்கு வந்த பக்தர்களிடம் தெரிவித்தார். இதை கண்டு பரவசம் அடைந்த பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா.. என்று கைகூப்பி வணங்கினர். மேலும், தகவல் அறிந்த சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து பார்த்தபோது இந்த நிகழ்வு 10 நிமிடம் மட்டுமே நீடித்ததால் சூரிய ஒளியை காண முடியாமல் சுவாமியை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

Related Stories: